நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் – மு.க.ஸ்டாலின்

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருந்த வசந்தகுமார், மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

காலியாக இருந்த இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, நாங்குநேரி தொகுதிக்கு நாளை மறுநாள் முதல் விருப்பமனுக்களை காங்கிரஸ் கட்சி பெற உள்ளதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே