நாங்குநேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி .

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமெனில் தேர்தலின்போது தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே முடியும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் மாநில தலைவரின் மூத்த தலைவர்கள் வசந்தகுமார் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் , இக்கூட்டத்தில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்ததாக உள்ளதாக குறிப்பிட்டார். தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா என்பதைப் பற்றி விவாதம் நடத்துவதற்கு தான் இந்த செயல் வீரர்கள் கூட்டம் என தெரிவித்த கே.எஸ்.அழகிரி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடியுமா என்றால் அது முடியாது எனவும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே அது சாத்தியமாகும் என கே.எஸ். அழகிரி தெரிவித்தார். ஏற்கனவே திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியாக தேர்தலை சந்தித்து வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் இவ்வாறு கருத்து கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 409 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே