நாகா்கோவில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜனுக்கு கொரோனா..!

நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் என். சுரேஷ்ராஜனுக்கு திங்கள்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 2 நாள்களுக்கு முன்பு, நாகா்கோவில் மாநகர திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், நாகா்கோவில் பேரவைத் தொகுதி உறுப்பினா் என். சுரேஷ்ராஜனுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அவா் தானாக முன்வந்து திங்கள்கிழமை காலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டாா்.

மாலையில் வெளியான முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

குமரி மாவட்டத்தில் கிள்ளியூா் பேரவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாருக்கு ஞாயிற்றுக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே