விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் ஆவணி மாதம் வளர்பிறை தொடங்கியுள்ளதால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நல்ல விலை கொடுத்து பூக்களை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
பவானிசாகர், கொத்தமங்கலம், ராஜன் நகர், புளியங்கொம்பு, பெரியகுளம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மல்லி மற்றும் சம்பங்கி பூக்களை விவசாயிகள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் முறையில் விற்பனை செய்து வருகின்றன. தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்குவதாலும், ஆவணி மாத வளர்பிறை முகூர்த்த சீசன் தொடங்கி உள்ளதாலும் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
தற்போது மல்லி பூ கிலோ 1230 ரூபாய் வரையிலும், முல்லை பூ 660 ரூபாய் வரையிலும், சம்பங்கி பூ 200 ரூபாய் வரை கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு முகூர்த்த சீசன் உள்ளதால் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.