நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஏற்போம்; ரஜினி வந்தால் எதிர்ப்போம் : சீமான்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஏற்போம் என்றும், ஆனால் ரஜினி வந்தால் எதிர்ப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இமானுவேல் சேகரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் அவரது திருவுருவ படத்திற்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாகன விற்பனை மந்த நிலைக்கு ஓலா உபர் போன்ற நிறுவனங்கள் காரணம் காட்டப்படும் நிலையில், இந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததே மத்திய அரசு தானே என்று கேள்வி எழுப்பினார்.

அரசியலுக்கு வந்து நடிகர் விஜய் நல்லது செய்தால், அதனை தாம் வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். ஆனால். நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் அதனை எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே