நடிகர் விஜயை மு.க.ஸ்டாலின் சந்தித்ததால் பாதிப்பு இல்லை – ஜெயக்குமார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜயை சந்தித்தாலும் சரி அமெரிக்கா, ரஷ்ய அதிபர்களை சந்தித்தாலும் சரி எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில், சமூக நலத்துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைப்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களான அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சரோஜா கலந்துக்கொண்டனர்.

ஊட்டச்சத்தான உணவு உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கூட்டத்தில் இருந்தவர்களிடமும் கேள்விகள் கேட்டு சரியான பதில் சொன்னவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வது தமிழ்நாடு அரசு எடுக்கும் ஒரு நல்ல முயற்சியாக பார்க்க வேண்டும் என்றும் இதை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பாராட்டி இருந்தால் அவர் மீதுள்ள மதிப்பு கூடியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே