தோனி பில்லியர்ட்ஸ் விளையாடும் புகைப்படங்கள் வைரல்

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, உற்சாகமாக பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

இந்திய துணை ராணுவத்தில் பணியாற்றுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து இரண்டு மாதக்காலம் விருப்ப ஓய்வு கேட்டுப் பெற்ற தோனி, ஓய்வுக்காலம் முடிந்த பின்னரும் அணியில் இணையாமல் இருந்துவருகிறார்.

ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடர்களின்போது அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததாலேயே இன்னும் அணிக்கு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தோனி உற்சாகமாக பில்லியர்ட்ஸ் விளையாடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி கவனம் பெற்றுவருகின்றன.

தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் அமைந்துள்ள மாநில கிரிக்கெட் மைதான உள் அரங்கில் நடந்த போட்டியின்போது இவை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே