தூத்துக்குடியில் தொடர் கொலைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, அந்த மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், சந்திப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், தூத்துக்குடியில் அரங்கேறிவரும் தொடர் கொலைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கொலை குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்களுக்கென பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.