தொடக்க வீரராக களமிறங்க கெஞ்ச வேண்டியது இருந்தது – சச்சின்

தொடக்க வீரராக களமிறங்குவதற்கு தான் பட்ட சிரமம் குறித்து சச்சின் டெண்டுல்கர் லிங்கிட்இன் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் 100 சர்வதேச சதங்களை அடித்துள்ளார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய டெண்டுல்கள், தொடக்க வீரராக களமிறங்குவதற்கு கெஞ்ச வேண்டியிருந்ததாக லிங்கிட்இன் பக்தத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், 1994 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில்தான், முதன்முதலாக தொடக்க வீரராக களமிறங்கியதாகவும், அந்த வாய்ப்புக்கு கெஞ்ச வேண்டியது இருந்ததாகவும் கூறினார்.

அந்த போட்டியில் 49 பந்துகளில் 82 ரன்கள் அடித்ததாகவும், எனவே தனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா?? என கேட்க வேண்டிய அவசியம் அப்போது எழுவில்லை எனவும் தெரிவித்தார். 

அதன்பின், தன்னையே தொடக்க வீரராக களமிறக்குவதில் சக வீரர்கள் ஆர்வம் காட்டியதாக கூறிய டெண்டுல்கர்,  யாரும் தோல்வியை கண்டு அஞ்ச வேண்டாம் என அந்த வீடியோவில் குறிப்பிட்டார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே