இந்தோனேஷியாவில் திருமணத்திற்கு முந்தைய உறவு குற்றம் என்ற சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது.
இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் திருமணத்திற்கு முந்தைய உறவு கடும் குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் யோக்யாக்கர்தா நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
அனுமதி பெறாமல் நடந்த கூட்டத்தை கலைக்கும் வகையில் போலீசார் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தீவைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதால் போலீசார் கண்ணீர்புகை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.