திமுக மாவட்ட நிர்வாகிகள் 7 பேர் அதிரடி நீக்கம்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில், ‘தர்மபுரி, தஞ்சை, சென்னை, காஞ்சிபுரம், மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 7 நிர்வாகிகள் அணியில் செயல்பாடுகளில் சரிவர ஈடுபடாத காரணத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாக’ அறிவித்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் 7 மாவட்ட நிர்வாகிகளை நீக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 404 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே