திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு

அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதை  சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வருகிற 23ம் தேதி தொடங்குகிறது என்றும் வாக்குப் பதிவு அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே