இந்தி திணிக்கப்பட்டால் எதிர்க்காமல் விடமாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவல்லிக்கேணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்த ஆயிரம் விளக்கு எஸ்.ஏ.எம்.உசேன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் சிராஜ் மஹாலில் நேற்று நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உட்பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், இயக்கம் என்றால் என்ன? என கற்றுத்தந்தவர் உசேன் என புகழாரம் சூட்டினார். இந்தி திணிப்புக்கு எதிராக அறிவித்திருந்த போராட்டம் ரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.