திமுகவினரால் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்

நாகை மாவட்டம் திருக்குவளையில் 2 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரப்பட்ட குளத்தை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக ஒப்படைத்தார்.

சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள வத்தமடையான் குளத்தை தூர்வார தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளம் தூர்வாரப்பட்டது.  இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளத்தை நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைத்தார். 

இதேபோல் திருவாரூர் அடுத்த நாரணமங்கலம் பகுதியில் உள்ள துர்வாசர் குளத்தை தூர்வாரும் பணியை ஜேசிபி வாகனத்தை இயக்கியவாறு உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குளம் தூர் வாரப்பட்டு கரைகளில் மரம் நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே