சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தஹில்ரமானி மீது நடவடிக்கை எடுக்கும்படி சிபிஐக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இரண்டு குடியிருப்புகளை வாங்க 3 கோடியே 18 லட்சம் ரூபாய் பணத்தை புரட்டியதாக கூறப்படுகிறது. இந்த பணம் தொடர்பான பரிமாற்றங்களை ஆய்வு செய்து உளவுத்துறையினர் அளித்துள்ள 5 பக்க ஆய்வு விபரங்களின் அடிப்படையில், ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் ஹெச்டிஎஃப்சி வங்கியிடம் இருந்து கடனாக பெறப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய் சொந்த நிதியிலிருந்து தரப்பட்டுள்ளது.
இந்த பண பரிமாற்றத்தில் முறைகேடு இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், சிபிஐ சட்டப்படி நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்த கொலிஜியம் உத்தரவை ஏற்க மறுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து தஹில்ரமானி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.