தஹில் ரமணியை மாற்றியது, பாஜகவின் பழிவாங்கும் செயல் : திருமாவளவன்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது பாஜகவின் பழிவாங்கும் செயலை காட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ள முதல்வரின் பயணம் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.

உள்துறை அமைச்சரை சந்தித்த பிறகும் 7பேர் விடுதலையில் காலம் தாழ்த்துவது வேதனை அளிப்பதாக கூறிய திருமாவளவன், ஆளுநர் கனியுடன் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பாஜக அரசின் 100 நாள் ஆட்சி, சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என்பதற்கு முத்தலாக் தடை சட்டம் ரத்து உள்ளிட்டவை எடுத்துக்காட்டு என்றும் திருமாவளவன் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை கண்டித்து இன்று நடைபெறவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டு வரும் 12ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே