உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்பூர் ராஜ், இவருடைய மனைவி நிலா பத்வானி. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஹர்பூர் ராஜின் மனைவி நிலா பத்வானி, ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துருக்கிறார்கள்.
வேறு வழியில்லாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறியவர்கள் அருகில் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை அழைத்த பொழுது அவர்களும் வர மறுத்துருக்கிறார்கள்.
நேரம் செல்ல செல்ல பிரசவ வழியால் துடித்த அந்த பெண்ணிற்கு வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு வெளியே நடுரோட்டில் அவரது உறவினர்கள் பிரசவம் பார்த்துருக்கிறார்கள்.
பிரசவத்திற்கு பின் பிறந்த அந்த பச்சிளம் குழந்தை நடுரோட்டில் அழும் காட்சி காண்போரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
- பொருளாதாரத்தை மீட்டெடுக்க மன்மோகன் சிங்கின் 5 அறிவுரைகள்
- #என் வேலை என் உரிமை; இந்திய அளவில் டிரெண்ட் செய்யும் தமிழர்கள்