தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகள் தேர்வை எழுத அனுமதிக்கக் கூடாது : ராமதாஸ்

தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகள் தேர்வை எழுத அனுமதிக்க கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், சிவில் வழக்குகளை கையாள்வதில் மொழி சார்ந்து பல சிக்கல்கள் இருக்கும் போது, தமிழ்மொழி அறியாதவர்கள் தேர்வு எழுதலாம் என்று அறிவித்திருப்பது குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் உள்ள வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் அபகரித்த நிலையில், தற்போது மாநில அரசுப் பணிகளையும் வெளிமாநிலத்தவர்கள் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வழக்குகளையும், வாதங்களையும், சாட்சிகளையும் கேட்டறிந்து தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதிகளுக்கு உள்ளூர் மொழி தெரியாவிட்டால் பணியை சரியாக செய்ய முடியாது என்று ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ் தெரியாதவர்களை சிவில் நீதிபதியாக நியமித்தால், கீழமை நீதிமன்றங்கள் ஹிந்தியிலும் பிற மொழிகளிலும் உருவாகும் என்றும், இது நல்லது அல்ல என்றும் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

சிவில் நீதிபதிகள் பணிகளில் தமிழர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் விதிகளை திருத்தம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே