தமிழ் திரையுலகில் பல நிராகரிப்புகளை கண்டேன் – வித்யாபாலன்

தமிழ் திரையுலகில் பல நிராகரிப்புகளை கண்டபோது தம்மைத் தாமே அசிங்கமாக இருப்பதாக நினைத்துக் கொண்டதாக நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் தன் திரையுலக வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். ஒருமுறை தான் நடிக்கவிருந்த தமிழ் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் காரணம் கேட்க தன் தந்தையுடன் தயாரிப்பாளரின் அலுவலகத்துக்கு சென்றபோது அவர் தான் நடித்த சில காட்சிகளை காட்டியதாகவும் பேட்டியில் கூறியுள்ளார். அந்த காட்சிகளில் தான் பார்ப்பதற்கு ஒரு கதாநாயகியை போலவா இருக்கிறேன் என கேட்டு தயாரிப்பாளர் தன்னை அவமதித்ததோடு அவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் இயக்குனருக்காக படத்தில் சேர்த்ததாக கூறி தன்னை நிராகரித்ததாகமும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் பல மாதங்களுக்கு தான் அசிங்மாக இருப்பதாக கருதி தான் கண்ணாடி கூட பார்க்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக வித்யாபாலன் வேதனை தெரிவித்துள்ளார். அதன்பின் நடித்த ஒரு தமிழ் படத்தில் நகைச்சுவை காட்சி பிடிக்காமல் தானே வெளியேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் எப்படி இருக்கிறேனோ அப்படியே ஏற்றுக்கொண்டு தன்னை தானே விரும்ப கற்று தந்த அந்த கசப்பான நிகழ்வுகளுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே