இரண்டு நாள் அரசு முறை பயணமாக பஹ்ரைன் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தமிழர் ஒருவரிடம் தமிழில் வணக்கம் என்று கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பஹ்ரைன் தலைநகரம் மனாமாவில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி நேற்று வழிபாடு நடத்தினார். அப்போது வழிபாட்டுக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க பஹ்ரைன் வாழ் இந்தியர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.
வரிசைகட்டி நின்ற அவர்களிடம் கை குலுக்கி நலம் விசாரித்தபடி வந்த பிரதமர் மோடியிடம் அங்கு நின்று இருந்த தமிழகத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் “தமிழர்” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அதற்கு தமிழில் வணக்கம் எனக்கூறி கை குலுக்கிய பிரதமர் மோடியால் அந்த இளைஞர்க்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது