சர்க்காரியா கமிஷன் முடிவுக்கு எதிராக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக மத்திய அரசு நியமிப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார், புதுச்சேரி மணக்குளம் விநாயகர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த நாராயணசாமி ‘சர்க்காரியா கமிஷன் முடிவுக்கு எதிராக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களை ஆளுநராகவும் துணைநிலை ஆளுநர் களாகவும் மத்திய அரசு நியமித்து வருவதாக கூறினார் இது ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் அவர் குற்றம் சாட்டினார் இவர்கள் அனைவரும் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவார்கள் எனவும் நாராயணசாமி விமர்சித்தார் , எனினும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்ட இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட அவர் தமிழிசை சௌந்தர்ராஜன் க்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
- கவலைக்கிடமான நிலையில் லல்லு பிரசாத் யாதவ்
- “விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர் ” : முத்தரசன்