தமிழக வீரர் பாஸ்கரனுக்கு தேசிய விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

தமிழக வீரர் பாஸ்கரன் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தினார்.

சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருதை வழங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விருதுடன் ஐந்து லட்சம் ருபாய் பரிசுத் தொகையையும் அவருக்கு வழங்கினார். பேட்மின்டன் வீரர் சாய் ப்ரணித், ஆசிய போட்டியில் தங்கம் வென்ற ஸ்வப்னா வருமர் ஆகியோருக்கும் ராம்நாத் கோவிந்த், அர்ஜுனா விருது வழங்கினார்.

இதனை தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் உள்ளிட்டோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே