தமிழகத்தில் வேட்டி சட்டையில் நாம் பார்த்துப் பழகிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் கோட்சூட் அணிந்து கெத்தாக வலம் வருகிறார் அவரது உடை குறித்து இணையத்தில் கிண்டலடித்தவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆடை என்பது உடலை மறைக்கும் விவகாரம் மட்டுமல்ல பலரின் அடையாளமும் ஆடைதான் காந்தி என்றால் ஒற்றைத் துண்டு அம்பேத்கர் என்றால் கோட் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் ஒருவரின் ஆடை மாறும்போது அது குறித்த பேச்சும் அதிகரிக்கத் தொடங்கிவிடும் அப்படி ஒரு இடத்தில்தான் தற்போது தமிழக முதலமைச்சரின் ஆடையும் பேசுபொருளாக மாறி உள்ளது , முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட் சூட் அணிந்து வலம் வருவது தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகிப் உள்ளது லண்டனில் கோட் சூட் அணிந்து அவர் வலம் வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . ஆனால் முதல்வரின் உடை குறித்து பலரும் கேலி கிண்டல் செய்தனர்.. தன்னை பற்றிய கிண்டல்களை முதல்வர் பழனிசாமி கண்டுகொள்ளாத நிலையில் அவர் கோட் சூட்டில் கெத்தாக வலம் வருவதை மற்றொரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
முதல்வரின் நடவடிக்கை உலகத் தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பாராட்டிப் உள்ளார் அறிஞர் அண்ணா வழியில் கோட் சூட் அணிந்து முதல்வர் பழனிசாமி செயல்படுவதாக கூறிய அவர் முதல்வரின் வெற்றியை திமுக தலைவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை எனவும் விமர்சித்தார்.
முதல்வரின் ஆடை குறித்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார் வேலை இல்லாதவர்களே ஆடை குறித்து கிண்டல் செய்வார்கள் என்று கூறிய சீமான் இந்த மண்ணின் முதலமைச்சரை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டிற்குச் செல்லும் போது அந்நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப ஆடை அணிவதில் எந்த சிக்கலும் எழுந்து விடப்போவதில்லை தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தபோது கூட வேட்டி சட்டையில் வந்திருந்த முதலமைச்சர் வெளிநாட்டில் கோட் சூட் க்கு மாறி உள்ளார் இதில் விமர்சிக்க என்ன இருக்கிறது என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது .