தமிழகம் முழுவதும் பரவலாக மழை – விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் அதிகாலையில் கனமழை பெய்தது. சென்னாவரம், பாதிரி, மாம்பட்டு, பிருதூர் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரமாக கருமேகம் சூழ இடைவிடாது பலத்தமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் பெண்ணாடத்தில் அதிகாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானார்கள்.

இது பற்றி பென்னாடம் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறையிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, ஒதியத்தூர், மேல்மலையனூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கன மழை பெய்ததால் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதே போல் இராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது.

இராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான பேராவூர், பட்டினம்காத்தான், அச்சுந்தான் வயல், சத்திரக்குடி, கீழக்கரை, சிக்கல், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் அடைமழை பொழிந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே