தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதிகன மழைக்கு வாய்ப்பு..!

வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கன மழை முதல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் இன்றும் நாளையும் பரவலாக கன மழை முதல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநில மலைப் பிரதேசங்கள் மற்றும் வட கொங்கன் பகுதிகளில் தீவிர கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக கன மழை முதல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே