புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும் – அமைச்சர் தங்கமணி

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி வலுவடைந்து, புயலாக (‘நிவா்’) மாறி புதன்கிழமை கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், புயலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்மணி தெரிவித்துள்ளார்.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.

இது அடுத்தடுத்து வலுவடைந்து, புயலாக (‘நிவா்’) மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் புதன்கிழமை (நவ.25) பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, புயல் கரையை கடக்கும் போது முன்னெச்சரிக்கை ஏற்பாடாக புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்.

புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசினாலும் சமாளிக்க மின்துறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக மின் கம்பங்கள் சாய்ந்தாலும், அதனை உடனடியாக சரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கஜா புயலின் போது மேற்கொண்ட பணிகளின் அடிப்படையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே