தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் – அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மதுக்கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லை அடுத்த என்.புதுப்பட்டி ஜங்களாபுரத்தில் நியாயவிலைக்கடை ஒன்றை திறந்து வைத்த அமைச்சர் தங்கமணி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 5 ஆயிரம் மதுக்கடைகளும், 2 ஆயிரம் பார்களும் இருப்பதாகத் தெரிவித்தார்.

மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்

பார்களுக்கான டெண்டர் திங்கட்கிழமை நடைபெறும் என்றும், அரசு மதுக்கடைகளில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே