தமிழகத்தில் சொக்கத்தங்க ஆட்சி – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் சொக்கத்தங்கம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி நடைபெறுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறதா?? அல்லது அதிமுக ஆட்சி நடக்கிறதா?? என்ற திருமாவளவன் கேள்விக்கு, திருமாவளவனுக்கு ஏன் இந்த மாதிரி சந்தேகம் எழுந்துள்ளது என கேள்வி எழுப்பினார்.

வேண்டும் என்றே திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தீர்க்க முடியாத பிரச்சனைகள் அ.தி.மு.க. ஆட்சியில் தீர்க்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே