எ.வ.வேலுவின் வீடு, அறக்கட்டளை உள்ளிட்ட 16 இடங்களில் வருமானவரித்துறை சோதனை..!!

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான வீடு, கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் இரண்டாவது நாளாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவருக்குச் சொந்தமான வீடுகள் கல்லூரிகள் என 18 இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

நேற்றுக் காலை 11 மணிக்குத் தொடங்கிய சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே