தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். 4 ஆம் தேதிக்கு பின்னர் வெப்பசலனம் காரணமாக மீண்டும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே