டோரியன் புயல் எச்சரிக்கையால் புளோரிடாவில் அவசர நிலை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டொரியன் புயல் எச்சரிக்கையால், அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போலந்து பயணத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்து உள்ளார்.

டொரியன் புயல் மிகவும் சக்திவாய்ந்த புயல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் எச்சரிக்கை ஏற்பாடுகள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கவனிக்க தான் நாட்டிலேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் போலந்துக்கு செல்லவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

கரையை கடக்கும் போது மத்திய புளோரிடாவில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியாவிலும் 12 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கர சூரை காற்று வீசி கொண்டிருப்பதால், புயல் எச்சரிக்கை மிகப்பெரிய புயலின் தாக்குதலைஅறிவித்திருப்பதால், புளோரிடா மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். உணவுப் பொருட்கள், குடிநீர் போன்றவற்றையும் அவர்கள் சேமித்து வைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே