ஜேம்ஸ்பாண்டாக நடித்து வரும் டேனியல் கிரேக், பாண்டு படவரிசையில் NO TIME TO DIE படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
51 வயதாகும் டேனியல் கிரேக் படப்பிடிப்பின் இறுதிநாளில் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.
படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த அவர், தாம் மிகவும் குடித்திருப்பதால் அதிக நேரம் பேச முடியாது என்று கூறினார்.
இந்தப் படம் தமக்கு கிடைத்த மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இப்படத்தின் மூலம் 5வது முறையாக ஜேம்ஸ்பாண்ட் வேடத்தை டேனியல் கிரேக் ஏற்றுள்ளார்.
இதுவே அவர் ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் கடைசிப்படமாகவும் இருக்கும். இந்த திரைப்படம் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகிறது.