தமது அனுமதியின்றி ஜெயலலிதா பற்றி வெப்சீரிஸ் எடுத்தால் திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேட்டியளித்த அவர், ஜெயலலிதாவின் வாழ்க்கையை குறித்து வெப்சீரிஸ் எடுக்க கௌதம் வாசுதேவ் மேனன் முடிவு செய்துள்ளது பற்றி குறிப்பிட்டார்.
ஜெயலலிதா பற்றி நல்லவிதமாக படம் எடுத்தால் அதை பற்றி ஆட்சேபணை இல்லை என்று தீபக் கூறினார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை பற்றி கௌதம் வாசுதேவ் மேனனுக்கு என்ன தெரியும்??? என கேள்வி எழுப்பிய தீபக், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வெளிக்கொண்டுவர ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பயன்படுத்திக் கொள்வதாக கூறியுள்ளார்.