சோதனைப் பாதைகளை சாதனையாக மாற்றிய மாடல் அழகி… |

இந்திய சமுதாயத்தில் ஒரு காலம் வரை குழந்தை திருமணம் என்பது மிகவும் இயல்பான ஒன்றாக இருந்து வந்துள்ளது. குழந்தை திருமணம் காரணமாக பெண்கள் மிக நீண்ட காலமாக பல கொடுமைகளை சந்தித்து வந்தனர் சுதந்திர போராட்ட காலத்தில்தான் குழந்தை திருமணத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர் சுதந்திர இந்தியாவில் பெண்கள் திருமணத்திற்கு என வயது வரம்பு சட்ட பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டது.

இருப்பினும் இன்றளவும் சில பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை இளம் வயதில் திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். குடும்ப வறுமையும் அதற்கு காரணமாக உள்ளது. அப்படி இளம் வயதில் திருமணம் செய்து கொள்ள நேர்ந்த தன்னுடைய நிலைமையை எதிர்த்து போராடி ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் மீண்டு வந்து சாதனை படைத்துள்ளார். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். ராஜஸ்தானைச் சேர்ந்த நிஷா யாதவ், இவர் ஒரு மாடல் அழகி. இவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு பயின்று வருகிறார். இவருடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள். சிறு வயதிலிருந்தே தந்தையின் கண்டிப்புடன் வளர்ந்து நிஷாவுக்கும் அவரது சகோதரிகளுக்கும் கல்வியின் மீது தீராத்தாகம். வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு ஆறு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று படித்து வந்தனர். இந்நிலையில் திடீரென நிஷாவை அவரது தந்தை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

ஆனால் இதற்கு நிஷாவும் அவரது சகோதரிகளும் ஒத்துக்கொள்ளவில்லை இதனால் கோபம் அடைந்த அவரது தந்தை அனைவரையும் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறி அவர்களை வீட்டை விட்டு துரத்தி உள்ளார். தகுந்த நேரத்தில் தக்கத் துணையாக இருக்க வேண்டிய பெற்றோர்கள் தங்களை கைவிட்ட நிலையில் ஐந்து பெண்களும் என்ன செய்வதென்று அறியாமல் நடுத்தெருவில் நின்றனர். ஆனால் கல்வியும் காலமும் அவர்களைக் கைவிடவில்லை. ஆம் இன்று நிஷா ஒரு மாடல் அழகி. அவரது சகோதரிகளில் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி, இன்னொருவர் போலீஸ் அதிகாரி, மற்றோருவர் கல்லூரி பேராசிரியர், ஒருவர் சாப்ட்வேர் இன்ஜினியர் என்று தனது சோதனை பாதைகளை சாதனை பயணங்களாக மாற்றி தங்களது வாழ்வை ஐந்து பெரும் வென்று உள்ளனர்.

இந்த கண்ணீர் கதையை கேட்டு நிகழ்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நிஷாவுடன் இணைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில் நிஷா தன்னுடைய கண்ணீர் கதையை விவரித்திருந்தார். தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்து பேசியுள்ள நிஷா, மாடல் அழகிகள் பலருக்கு பின்னாலும் ஒரு கண்ணீர் கதை உள்ளது என்றும் நீங்கள் அழகையும் பெருமையும் மட்டுமே பார்க்கிறீர்கள் ஆனால் அதற்கு பின்னால் கடுமையான உழைப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். பெண் குழந்தைகளை அவர்களது படிப்பை நிறைவு செய்த உடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறும் நிஷா ஆண்களாக இருந்தால் அவர்கள் விரும்பும் நேரத்தில் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். நிஷா பேசிய இந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே