செப்.27ம் தேதி ஐநா.சபையில் உரை – பிரதமர் மோடி

ஐநா.சபையின் 74வது பொதுக்குழுக் கூட்டத்தில் பிரதமர்மோடி வரும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி உரை நிகழ்த்த உள்ளார்.

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் செப்டம்பர் 17ம் தேதி ஐநா.சபையின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுவார்கள். காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப ஐநா.பொதுக்குழு கூட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலளிக்கும் விதமாகவும் இந்தியாவின் கொள்கையை உலக நாடுகளுக்கு உணர்த்தும் விதமாகவும் பிரதமர் மோடியின் உரை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே