சென்னை கோட்டத்தில் ரூ.4.39 கோடி ரயில் அபராதம் வசூல்

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

சென்னை கோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் டிக்கெட் இன்றி இரயில் பயணம் செய்தவர்களிடம் இருந்து 4 கோடியே 39 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மின்சார ரயில்கள், நீண்டதூர ரயில்கள், முன்பதிவில்லா ரயில்கள் என 13,100 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினசரி 2 கோடியே 30 லட்சம் பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர்.

இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தபோதிலும் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பயணச்சீட்டு இன்றி ரயில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களில் சென்னை கோட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 915 பேர் பயணசீட்டு இன்றி பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 468 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே