சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க பரிந்துரை

சென்னையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி சென்னை உடைய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில்ரமணி கொலிஜியம் அமைப்பின் பரிந்துரை – இன் அடிப்படையில் அவர் மேகாலயா நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

மேகாலயா நீதிமன்றத்தின் நீதிபதி ஆக பணிபுரிந்து வந்த ஏ.கே.மிட்டல் என்பவர் தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதாக கொலிஜியம் அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை போன்ற பழமையான மிகப்பெரிய நீதிமன்றத்தில் பணி புரிந்த ஒரு தலைமை நீதிபதியை மேகாலயா போன்ற ஒரு சிறிய நீதிமன்றத்தில் பணி அமர்த்துவது என்பது வழக்கமான மரபு கிடையாது. ஆனால் கொலிஜியம் அமைப்பு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

எனவே சட்டத்தின் அடிப்படையில் நிர்வாக காரணங்களுக்காக இந்த முடிவெடுத்திருப்பதாக ஏற்கனவே பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்த நிலையில், ஆனால் அந்த நடவடிக்கை என்பது வழக்கமான மரபு கிடையாது விதிகளின்படி எந்த தவறும் இல்லை என்றாலும் கூட ஒரு பெரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்த ஒருவரை சிறிய நீதிமன்றத்தில் மேகாலயா போன்ற மூன்றாயிரம் நான்காயிரம் வழக்குகள் தேங்கி நிற்கக்கூடிய நீதிமன்றத்தில் நியமிப்பது என்பது வழக்கமான நடைமுறை கிடையாது என்று கூறியிருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல் என்பவரை நியமிப்பதற்காக கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே