சென்னையில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பெண் ஊழியர் பலி

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

சென்னையில் ஐடி நிறுவன பெண் ஊழியர் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே அலுவலகத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த ஜெனிட்டா ஜூலியஸ், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நேற்று பணிக்குச் சேர்ந்தார்.

இந்நிலையில் அலுவலகத்தின் எட்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அலுவலகத்தின் 9 ஆவது மாடியில் உள்ள உணவகத்தில் இருந்து தடைசெய்யப்பட்ட மாடிப்படி வழியாக கீழ் தளத்திற்கு இறங்க முயன்றபோது ஜெனிட்டா தவறி விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே