சென்னையில் நவீன வசதியுடன் பெண்கள் விடுதி கட்டப்படும் : அமைச்சர் சரோஜா

உலக வங்கியுடன் இணைந்து தமிழகத்தில் நான்கு இடங்களில் உலகத்தரம் வாய்ந்த பெண்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் பெண்கள் தங்கும் விடுதியினை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சரோஜா, சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் , 28கோடி ரூபாய் மதிப்பில் 4 பெண்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக வரும் 12ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறிய அமைச்சர் சரோஜா, யோகா, திறன் மேம்பாட்டு பயிற்சி உட்பட நவீன வசதிகளுடன் 800 பேர் தங்கும் அறைகள் அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே