சென்னையில் இதுவரை 2600 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இதுவரை 2,600 விநாயகர் சிலைகள் வைப்பதற்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

வரும் திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் விநாயகர் சிலைகள் வைப்பது குறித்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனிடையே தற்போது வரை சென்னையில் 2600 விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் இன்றும் நாளையும் இது தொடர்பான ஆய்வுகள் தொடரும் என்றும் அதன் பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்னையில் பதற்றமான இடங்கள் எவை என கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட நாள் முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் 2700 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே