சென்னையில் இடிமின்னலுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், தரமணி மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

குரோம்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், போரூர், வளசரவாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மழை காரணமாக ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடத்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் மீண்டும் மழை பெய்தது குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே