சென்னையில் அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2600 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. கடந்த 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் காசிமேடு, பெரியார் நகர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, ஆகிய 6 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

பெரிய ரக சிலைகளை கரைக்க டிராலி மற்றும் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக பட்டினப்பாக்கம் பகுதியில் மட்டும் ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. அங்கு மட்டும் 800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியான முறையில் சிலைகள் கரைக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 404 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே