தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட உள்ள வீடியோவில், “தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, தற்போது #JusticeForSubaShree என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.