சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெற்றி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.

அந்நாட்டின் சாங்சோவ் நகரில் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியனும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான பி.வி.சிந்து, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன வீராங்கனை லி-சுவேரியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 21-18, 21-12 என்ற செட்கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். 34 நிமிடங்கள் மட்டுமே இப்போட்டி நடந்தது.

இந்த வெற்றியின் மூலம் பி.வி.சிந்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை பூசனனிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய வீரர் சாய் பிரனீத் வெற்றி பெற்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா- சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே