சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, சீன ஓபன் பேட்மிண்டனில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

சீனாவில் நடைபெற்று வரும் அந்த போட்டியின் இராண்டாவது சுற்றில் பி.வி.சிந்து, தாய்லாந்தை சேர்ந்த சோச்சுவாங்கை எதிர்கொண்டார்.

இதில் பிவி சிந்து 21-12, 13-21, 19-21 என தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

முதல் சுற்றில் பிவி சிந்து 3-0, 7-1 என முன்னிலையில் இருந்தார்.

அதன்பின் தாய்லாந்து வீராங்கனை இடைவெளியை 10-11 எனக் குறைத்தார். பி.வி.சிந்து தொடர்ச்சியாக 8 புள்ளிகள் பெற்று இறுதியில் 21-12 என முதல் செட்டை கைப்பற்றினார்.

2-வது செட்டில் தாய்லாந்து வீராங்கனை சோச்சுவாங் சிறப்பாக விளையாடினார். 5-1 என முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், பிவி சிந்து 7-9 என நெருக்கடி கொடுத்தார்.

அதன்பின் சோச்சுவாங் 15-7 என முன்னிலைப் பெற்று 2-வது செட்டை 21-13 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பிவி சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

6-6 என இருவரும் சமநிலையில் இருந்த நிலையில், பிவி சிந்து 11-7 என முன்னிலைப் பெற்றிருந்தார். ஒரு கட்டத்தில் பிவி சிந்து 19-15 என முன்னிலைப் பெற்றிருந்தார்.

ஆனால் சோச்சுவாங் தொடர்ந்து 6 புள்ளிகள் பெற்று 21-19 என 3-வது செட்டை கைப்பற்றி பிவி சிந்துவை வெளியேற்றினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே