சிவகார்த்திகேயன் நடித்துள்ள ” HERO ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கேஜே ஆர்ட்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ஹீரோ. மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வரும் டிசம்பர் 20 – ஆம் தேதி ஹீரோ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே