சினிமா டிக்கெட்டுகள் விரைவில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும்

சினிமா டிக்கெட்டுகள் விரைவில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடக்கு திட்டங்குளத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், முதல்வரின் பயணத்தை மக்கள் கேலிக்கூத்தாக கருத வில்லை எனவும், மு க ஸ்டாலின் வெளிநாடு சென்றதை தான் கேலிக்கூத்தாக நினைத்த தாகவும் குறிப்பிட்டார்.

அமுமுகவை ஒரு இயக்கமாகவே கருதவில்லை என கூறியவர், சினிமா டிக்கெட் விற்பனை, உணவுப்பொருள் தரம் குறித்து ஆய்வு செய்யப் படுவதாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே