இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் சார்பில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 5 அரசு சித்தா கல்லூரிகள் மற்றும் 20 தனியார் சித்தா கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு கல்லூரிகளில் 318 இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 720 அரசு ஒதுக்கீடு இடங்கள் என மொத்தம் 1038 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தில் இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஐந்தரை ஆண்டு படிப்புகளான இளங்கலை சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் யுனானி படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஹோமியோபதி பிரிவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து கலந்தாய்வில் தேர்வு பெற்ற மாணவ – மாணவிகளுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் கணேசன் சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.