சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆசம் கானின் மனைவி, மின்சார திருட்டு புகாரில் கைது செய்யப்படுவதை தவிர்க்க முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆசம் கானின் மனைவி தசீன் பாத்திமா, உத்தர பிரதேச மாநிலத்தில் ரிசார்ட் ஒன்றை நடத்தி வருகிறார்.
அந்த ரிசார்ட்டில் முறைகேடாக மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு ஆகியவை பெறப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் 5ம் தேதி, அந்த ரிசார்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில், முறைகேடான மின் இணைப்பு பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த ரிசார்ட்டுக்கான மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இதனால் போலீசார் தம்மை கைது செய்யக் கூடும் என அஞ்சிய தசீன் பாத்திமா, தனது வழக்கறிஞர் நசீர் சுல்தான் மூலம், ராம்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தசீன் பாத்திமாவுக்கு முன் ஜாமீனும் வழங்கியுள்ளது.
எம்.பி. ஆசம் கான் மீது சுமார் 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை ஜவ்கர் பல்கலைகழகத்தின் மீதான நில ஆக்கிரமிப்பு வழக்குகளாகும். ஆசம் கான் ஜவ்ஹர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.