வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு சாவகாசமாக கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாரூக் என்பவர் குடும்பத்துடன் பெங்களூர் சென்று இருந்தார். காலை அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பொதுமக்கள் பாரூக்கிற்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது திருடர்கள் உணவு சமைத்தது, சாப்பிட்டதது தெரிய வந்துள்ளது. மேலும் சாவகாசமாக சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்த இரு சக்கர வாகனம், தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை திருடி சென்றனர்.